அக்கம்பக்க வட்டாரத்தில் எந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக காப்பிக்கடையில் குறைந்த விலையில் உணவு கிடைக்கும் என்பதைக் குடியிருப்பாளர்கள் கண்டறிய புதிய இணையத்தளம் கைகொடுக்கும்.
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் துணையுடன் 'பட்ஜெட் கோ மீல் வேர்' என்ற அந்த இணையத்தளத்தை வீவக அறிமுகப்படுத்தியுள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண்ணை அதில் குறிப்பிட்டால் போதும், இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள குறைந்த விலை உணவுக் கடைகளும் விலைகளோடு உணவு வகைகளின் பட்டியலும் காட்டப்படும்.
இப்போதைக்குக் கிட்டத்தட்ட 40 காப்பிக்கடைகள் அந்த இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்.
குறைந்த விலை உணவுக்கடைகளைத் தேடுவதற்கான இணையத்தள முகவரி: https://www.gowhere.gov.sg/budgetmeal/