புத்தாண்டுக்கு முதல் நாளான டிசம்பர் 31ஆம் தேதி பொதுப் பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது.
எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி இரண்டும் பொதுப் பேருந்து, ரயில் சேவைகளின் நேரத்தை நீட்டிக்கின்றன.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைகளில் ஜனவரி 1ஆம் தேதி பின்னிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி ரயில் சேவை 1.40 மணிக்கும் 2.15 மணிக்கும் இடையில் இருக்கும்.
வடகிழக்கு, டெளன்டவுன் ரயில் பாதைகளில் ஜனவரி 1ஆம் தேதி பின்னிரவு ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளது. அன்றைய தினம், அதே அளவு நேரத்துக்கு செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையும் (எல்ஆர்டி) நீட்டிக்கப்படும்.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 19 பேருந்துச் சேவைகள் இயங்கும் பேருந்து முனையங்களில் கூடுதல் நேரம் செயல்படும். 60A, 63M, 114A, 222, 225G, 228, 229, 232, 238, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812 ஆகியவை அவை.
எஸ்எம்ஆர்டியின் 18 பேருந்துச் சேவைகள் பின்னிரவு 3 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 181, 240, 241, 243G 974A ஆகியவை அவை.
மேல்விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளங்களை நாடலாம்.

