தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த இரண்டு வாரங்களில் வெப்பம் அதிகரிக்கும்; மழை குறையக்கூடும்

1 mins read
51383e84-1e26-4568-bdd5-06582e99c2f4
வெப்பநிலை சில நாள்களில் 34 டிகிரி செல்சியசாகப் பதிவாகக்கூடும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் குறைந்த மழையும் அதிக வெப்பமும் இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வெப்பநிலை சில நாள்களில் 34 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் சில நாள்களில் இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை கிட்டத்தட்ட 28 டிகிரி செல்சியசாக இருக்கும்.

ஜூலை மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியில் வறண்ட வானிலை நிலவும்.

சில நாள்களில் காலை, பிற்பகல் நேரங்களில் அவ்வப்போது குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்