தலைமைத்துவப் பொறுப்புகளில் உள்ள தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை

தலைமைத்துவப் பொறுப்புகளில் உள்ள தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை

தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையிலும் இவ்வாறு இருக்கிறது
படம்: சாவ்பாவ்

21 Nov 2026 - 9:38 am

1 mins read

ஒவ்வொரு தலைமுறை முழுநேர தேசிய சேவையாளர்களிலும் கூடுதலானோர் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கக்கூடும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

போர் நடவடிக்கைகள் இப்போது ஓரிடத்திலிருந்து இயக்கப்படும் முறையிலிருந்து மாறிவரும் நிலையில் சிங்கப்பூர் ஆயுதப் படை, பல கோணங்களிலிருந்துப் போரிட வகைசெய்யும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த, சிறிய படைகளுடன் செயல்படத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறது.

அப்படியென்றால், சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்துவந்தாலும் பயிற்சி அதிகாரிப் பள்ளி (Officer Cadet School), நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிகள் பள்ளி (Specialist Cadet School) ஆகியவற்றில் பயிற்சி பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் மாற வாய்ப்பில்லை என்று திரு சான் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்