கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 64 வயது ஆடவர் தமது வீட்டிற்கு வெளியே சமையல் கத்தியை ஏந்திக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தினார்.
போதைப்பொருள் உட்கொண்ட இங் எங் குய் என்ற அந்த ஆடவர், அதிகாரிகளிடம் சரணடையாமல் அவர்களை தாக்க முயன்றார்.
காவல்துறை அதிகாரிகள் இங் மீது மூன்று முறை மின்சாரம் பாய்ச்சும் இயந்திரம் (டேசர் கருவி) கொண்டு அடக்க முயன்றனர்.
இருப்பினும், இங் கட்டுக்கடங்காமல் அதிகாரிகளை நோக்கி கத்தியைக்கொண்டு தாக்க ஓட்டினார்.
இங் தமக்கும் தமது சக ஊழியர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கருதிய காவல்துறை அதிகாரி ஒருவர், ஆடவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதில் துப்பாக்கிக் குண்டு இங்கின் மார்பில் பாய்ந்தது. அதன் பின்னர் இங் மாண்டார்.இச்சம்பவம் பெண்டிமியர் ரோட்டில் உள்ள புளோக் 33 இல் நடந்தது.
இங்கின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் தங்கள் சீறுடையில் அணிந்திருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வழக்கு விசாரணையின் போது சமர்ப்பித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபது கமலா பொன்னம்பலம் இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறினார். இதில் எந்த சூதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

