யூனிவர்சல் ஸ்டுடியோவில் மின்தடை- கேளிக்கை நடவடிக்கைகள் பாதிப்பு

1 mins read
45bf8070-458e-4995-b844-8a5f21205920
சிங்கப்பூர் யூனிவர்சல் ஸ்டுடியோவை சுற்றிப்பாக்க வந்திருந்தப் பார்வையாளர்களுக்கு திங்கட்கிழமை ஏமாற்றமான நாளாக அமைந்தது. - கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் யூனிவர்சல் ஸ்டுடியோவைச் சுற்றிப்பாக்க வந்திருந்த பார்வையாளர்களுக்கு திங்கட்கிழமை ஏமாற்றமான நாளாக அமைந்தது. அங்கு மின்தடை ஏற்பட்டதையடுத்து சில கேளிக்கை நடவடிக்கைகள் பாதியிலே நிறுத்தப்பட்டன. அதனால், அதில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் சிறிதுநேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

மின்தடையால் பெரும்பாலான விளையாட்டுகள் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு செயல்பாட்டில் இல்லை எனப் பார்வையாளர் ஒருவர் தெரிவித்தனர். மற்றொரு பார்வையாளர் தான் 30 நிமிடங்கள் மம்மி ராட்சச ராட்டினத்தில் காத்திருந்ததாக சீன சமூக ஊடகத்தளமான ‘சியாஹாங்ஷு’விடம் தெரிவித்தார்.

சில இணையவாசிகள் அன்று செயல்பாட்டில் இருந்த பெரும்பாலான கேளிக்கை நடவடிக்கைகள் குழந்தைகளுக்கானவை என்றும் அதில் பயணம் செய்ய 100 நிமிடங்கள் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் அந்தத் தளத்தில் தெரிவித்தனர்.

மின்சாரம் வழங்கும் சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கேளிக்கைப் பூங்காவில் திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் மின்தடை ஏற்பட்டது என ரிசோட்ஸ் வோர்ல்டு செந்தோசாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

கேளிக்கை நடவடிக்கைகளில் காத்திருந்தவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டதாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்