சிங்கப்பூரின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஹரேஷ் சிங்கராஜு, தான் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர் என்று தெரிவித்துள்ளார்.
மசெக (PAP) சின்னம் கொண்ட டி-சட்டையை அவர் அணிந்திருக்கும் படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.
அந்தப் படம் தற்போது அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மசெகவிலிருந்து எப்போது விலகினீர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மசெக சின்னத்துடன் தெம்பனிஸ் என்று எழுதப்பட்ட டி-சட்டையை அவர் அணிந்திருப்பதைக் காட்டும் படம் அவரது இன்ஸ்டகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு, ரெடிட் (Reddit) இணையக் கருத்துமன்றத்தில் வெளியிடப்பட்டது.
தேசியப் பல்கலைக்கழக பலதுறை மருந்தகத்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஹரேஷ், ஜனவரி 2ஆம் தேதி நியமன நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் அந்தப் படம் இணையத்தில் உலா வர ஆரம்பித்தது.

