தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்களுக்கான சிஓஇ கட்டணத்தில் பெரிய மாற்றமில்லை; வர்த்தக வாகனங்கள் 2.9% ஏற்றம்

1 mins read
034ab2e8-1bc0-4837-be99-d03a4d505626
பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களில் 0.4 விழுக்காடு சரிவு பதிவானது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான (சிஓஇ) ஆக அண்மைய ஏலத்தில் கார்களுக்கான கட்டணங்களில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.

புதன்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற ஏலத்தில் வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 2.9 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் எல்லா வாகனப் பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் ஏற்றம் கண்டது.

சிறிய கார்களுக்குரிய கட்டணம் கடந்த ஏலத்தில் பதிவான  $101,102 என்னும் நிலையிலேயே புதன்கிழமை முடிவடைந்தது.

பிரிவில் இடம்பெற்றுள்ள பெரிய கார்களுக்கான கட்டணம்  $119,101 எனப் பதிவானது. இதற்கு முன்னர் $119,600 என இருந்த கட்டணத்தில் 0.4 விழுக்காடு சரிந்துள்ளது.

பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள கார்களுக்கான சிஓஇ கட்டணம் 1.3 விழுக்காடு உயர்ந்து $120,000 என முடிவடைந்தது. முந்தைய ஏலத்தில் அது $118,500 எனப் பதிவானது.

மோட்டார் சைக்கிள் தவிர்த்து இதர எல்லா வாகனங்களும் பொதுப் பிரிவில் அடங்கும். இருப்பினும், இந்தப் பிரிவில் பெரும்பாலும் பெரிய, சக்திவாய்ந்த கார்களே இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் இதற்கு முன்னர் $66,689ஆக இருந்தது. புதன்கிழமை ஏலத்தில் அது 2.9 விழுக்காடு கூடி, $68,600 என்று முடிவடைந்தது.

குறிப்புச் சொற்கள்