வெஸ்ட் கோஸ்ட்டில் இருந்த கனரக வண்டி ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீப்பிடித்துக்கொண்டது.
71, வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலைக்கு அருகில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து தனக்குக் காலை 7.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவம் தொடர்பான காணொளி டிக்டாக்கில் வெளியிடப்பட்டது. மஞ்சள் நிற கனரக வாகனத்தின் முன்பக்கம் தீப்பிடித்துக்கொண்டதை அதில் காணமுடிந்தது.
இந்த வாரம் தீப்பிடித்துக்கொண்ட இரண்டாவது கனரக வாகனம் இது.
சென்ற செவ்வாய்க்கிழமை காலை ஈசூன் அவென்யூ 2இல் உள்ள மேம்பாலம் ஒன்றில் கனரக வாகனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளிவரவில்லை.
இரண்டு தீச்சம்பவங்களின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.