தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வாடகை கார்களுக்குத் தனி சிஓஇ பிரிவு கிடையாது: ஏமி கோர்

1 mins read
700ff1fb-3c5a-42b2-8980-3ed3976eb389
வாகன விநியோகம் உச்சத்தை எட்டும்வரை 2026ஆம் ஆண்டிலிருந்து கார்களுக்கும் வர்த்தக வாகனங்களுக்கும் உள்ள சிஓஇ ஒதுக்கீட்டை அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து கூட்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வர்த்தகங்களுக்குச் சொந்தமான தனியார் வாடகை கார்களுக்கெனத் தனி வாகன உரிமச் சான்றிதழ் (சிஓஇ) பிரிவு இருக்காது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் பலமுறை நடந்து, ஓராண்டுக்கும் மேலாக அணுக்கமாக ஆராயப்பட்டு வந்த விவகாரம் இது என்று தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக, வாகன விநியோகம் உச்சத்தை எட்டும்வரை 2026ஆம் ஆண்டிலிருந்து கார்களுக்கும் வர்த்தக வாகனங்களுக்கும் உள்ள சிஓஇ ஒதுக்கீட்டை அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து கூட்டும் என்றார் டாக்டர் கோர்.

மாறிவரும் பயண வழக்கங்களாலும் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டணமுறை அமைப்பாலும் அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலாக 20,000 சிஓஇக்கள் சேர்க்கப்பட்டு விநியோகத்தை அதிகப்படுத்தும் என்று அவர் விவரித்தார்.

அரசாங்கம் தனியார் வாடகை கார்களுக்காக தனி சிஓஇ பிரிவை ஏற்படுத்துதல், சந்தாக்களைச் சமாளிக்க வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லிம் பியாவ் சுவான் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் கோ இவ்வாறு பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்