செங்காங், பொங்கோங் இலகு ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை சேவை தடைபட்டுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் (SBS Transit) தெரிவித்துள்ளது. மின்சாரக் கோளாற்றால் சேவை தடைபட்டதாகக் காலை மணி 8.54க்கு அது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டது.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் சொன்னது. செங்காங் பேருந்து முனையத்திலிருந்து இலவசச் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.