பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நியமன எம்.பி.க்கள்

1 mins read
1662e2c4-5184-4952-b8d1-e635dfe4f399
தங்கள் பதவி உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

புதிதாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில், தங்கள் பதவி உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் முன்னிலையில் அவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

முன்னதாக, பதவியேற்பதற்கு முன்பு முக்கியப் பிரமுகர் கூடத்தில் காத்திருந்த அவர்கள், அவைக்குள் நுழையும் நாடாளுமன்ற உறு்பபினர்களால் வரவேற்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலோர் வேலைவாய்ப்பு, பொருளியல் மேம்பாடு போன்றவற்றில் முக்கியக் கவனம் செலுத்துவர் என்று குழு முன்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

2023 முதல் 2025 வரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய திரு மார்க் லீயைத் தவிர, மற்ற எட்டுப் பேரும் இந்தப் பதவிக்கு புதியவர்கள். அவர்கள் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் வரை பணியாற்றுவார்கள்.

இந்த முறை இந்தப் பதவிக்கு மொத்தம் 57 பேர் விண்ணப்பித்தனர். 1990ல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

குறிப்புச் சொற்கள்