2026 லீ குவான் யூ நீர் விருதுக்கு முன்மொழியலாம்

1 mins read
61ac5e76-9449-451a-82bc-23830e3fde6d
2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ நீர் விருதைப் பெற்ற பேராசிரியர் கெர்ட்யான் மெடீமா (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் நீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியிருப்போரைப் பொதுப் பயனீட்டுக் கழகம் அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அவர்களில் ஒருவருக்கு அடுத்த ஆண்டுக்கான லீ குவான் யூ நீர் விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 16) முதல் ஜூலை 11 வரை தனிநபர்களையும் அமைப்புகளையும் முன்மொழியலாம்.

லீ குவான் யூ விருது, ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டுவருகிறது. புத்தாக்கத் தொழில்நுட்ப முறைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியோ அவற்றின் வாயிலாகவோ உலகின் நீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியிருக்கும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் யூவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடாக இருந்த சிங்கப்பூர், மீள்திறன்மிக்க நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடனான நீர் விநியோக முறையைக் கொண்ட நாடாக உருவெடுத்ததற்கு திரு லீயின் தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் காரணங்கள் என்பதால் இந்த விருதுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்