தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்புப் பெறும் பாட்டாளிக் கட்சி

1 mins read
53170fd0-e56a-4a81-ba41-3afbad0198ef
பாட்டாளிக் கட்சியின் திரு ஆண்ட்ரே லோ, தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தல் 2025இன் முடிவில் இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க பாட்டாளிக் கட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெற்றிப்பெறாத வேட்பாளர்களுடன் ஒப்புநோக்க பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் ஜாலான் காயு தனித்தொகுயிலும் தெமப்னிஸ் குழுத்தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்றனர்.

ஜாலான் காயுவில் போட்டியிட்ட கட்சியின் புதுமுகம் ஆண்ட்ரே லோ, 33, ஊழியரணித் தலைவர் இங் சீ மெங்கிடம், 56 நூலிழையில் தோற்றார். திரு லோ 48.53% வாக்குகளைப் பெற்று பின்னடவைச் சந்தித்தார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் இடம்பெற்ற நான்குமுனை போட்டியில் பாட்டாளிக் கட்சி அணி 47.37% வாக்குகளைக் கைப்பற்றியது.

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் களமிறங்கிய பாட்டாளிக் கட்சி அணி.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் களமிறங்கிய பாட்டாளிக் கட்சி அணி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எனவே திரு லோவுக்கும் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்ட அணியிலிருந்து ஒரு வேட்பாளருக்கும் அடுத்த நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கிறது.

பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் திரு ஃபைசல் மனாப், 49, திரு ஜிம்மி டான், 53, டாக்டர் ஓங் லியு பிங், 48, திருவாட்டி இலீன் சொங், 33, திரு மைக்கல் தெங், 37 ஆகியோர் தெம்பனிஸில் போட்டியிட்டனர்.

பாட்டாளிக் கட்சியிலிருந்து யார் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார் என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம், எதிர்க்கட்சியைச் சேர்ந்த குறைந்தது 12 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

குறிப்புச் சொற்கள்