இணையப் பாதுகாப்புத் துறையில் அனுபவம் பெற விரும்பும் பொறியாளர்கள், பொருள் சாதனங்களின் இணையம் (Internet of Things) தொடர்பான அறிமுகப் பயிற்சி வகுப்பை எதிர்பார்க்கலாம்.
அந்தப் பயிற்சி வகுப்பு சிங்கப்பூர் பொறியாளர்கள் கழகத்தின் உறுப்பினர்களுக்குத் தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் வகுப்பில், சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் முறையைப் பயன்படுத்தும் இணையக் கருவிகள், கட்டமைப்புகள், வீட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்து பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ளலாம்.
அந்தப் பயிற்சி வகுப்பு, புதிய ‘சைபர்எஸ்ஜி திறனாளர், புத்தாக்க, வளர்ச்சி (டிஐஜி) ஒருங்கிணைப்பு நிலையம்’, பொறியாளர்கள் கழகம், தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்.
இணையப் பாதுகாப்புத் துறையில் உத்தேசத் திறனாளர்களை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.

