வடக்கு கிழக்குப் பாதைக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் தாமதமாக காலை எட்டு மணிக்குத் தொடங்கும்.
ஜூன் 30, ஜூலை 7, ஜூலை 14, ஜூலை 21 ஆகிய நாள்களே அவை.
புதிய பொங்கோல் கோஸ்ட் நிலையத்தை தற்போதுள்ள பாதையுடன் இணப்பதற்கான சோதனைப் பணிகள் அப்போது மேற்கொள்ளப்படும்.
ஞாயிறு அன்று பொங்கோல் நிலையத்திலிருந்து ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்தை நோக்கிச் செல்லும் முதல் ரயில் வழக்கமாக காலை 6.02 மணிக்குப் புறப்படும். மற்றொரு திசையில் பொங்கோல் நிலையத்தை நோக்கிச் செல்லும் ரயில் வழக்கமாக காலை 6.10 மணிக்குப் புறப்படும்.
பொங்கோல் கோஸ்ட் நிலையம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.

