தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடக்கு - தெற்குப் பாதை: நொவீனா சாலைச் சந்திப்பில் மாற்றங்கள்

2 mins read
aaaa4792-2b72-4e09-b331-06e02aaf427b
2027 முதல் வடக்கு - தெற்குப் பாதைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்வரை, புதிய நொவீனா போக்குவரத்துக் கட்டமைப்பு நடப்பில் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன் சாலை, மோல்மென் சாலை, நியூட்டன் சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலைச் சந்திப்பைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் செப்டம்பர் 8ஆம் தேதிமுதல் அந்தப் பகுதியில் இரண்டு ‘டி’ வடிவ சாலைச் சந்திப்புகளைப் பார்க்கலாம்.

வடக்கு - தெற்குப் பாதைக்கான அடுத்தகட்ட பணிகளுக்கு வழிவிட இந்தப் புதிய போக்குவரத்துக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அது, 2027 முதல் வடக்கு - தெற்குப் பாதைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்வரை நடப்பில் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

நொவீனாவின் விரிவான மேம்பாட்டால் தாம்சன் சாலைக்கு அடியில் வடக்கு - தெற்குப் பாதையை அமைக்க, வெவ்வேறு கட்டப் போக்குவரத்து மாற்றுவழிகள் தேவைப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

கோல்டுஹில் பிளாசா சாலையை ஒருவழி சாலையாக மாற்றுவது மற்ற போக்குவரத்து மாற்றங்களில் அடங்கும். தற்போது வாகனங்கள் தாம்சன் சாலை, கியாங் குவான் அவென்யூ ஆகிய வழிகள் மூலம் கோல்டுஹில் பிளாசா சாலைக்குச் செல்லலாம்.

மாற்றத்திற்குப் பிறகு, தாம்சன் சாலையிலிருந்து மட்டுமே அங்குச் செல்ல முடியும்.

நியூட்டன் சாலையிலிருந்து தாம்சன் சாலைக்குச் செல்லும் இடப்பக்க இணைப்புச் சாலையை அகற்றுவது மற்றொரு புதிய மாற்றமாகும். வாகனங்கள் நிறுத்தி அங்குள்ள போக்குவரத்து விளக்கிற்குக் காத்திருக்கவேண்டும்.

தற்போது, வாகன ஓட்டிகள் நியூட்டன் சாலையிலிருந்து தாம்சன் சாலைக்குச் செல்லும்போது போக்குவரத்து விளக்கிற்கு நிறுத்தாமல் நேரடியாக வளையலாம்.

புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைத் தொடர்ந்து, தீவு விரைவுச்சாலையிலிருந்து மோல்மென் சாலையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் இடது பக்கம் திரும்புவதற்கு முன்னர், நொவீனா ஸ்குவேருக்கு முன்னால் உள்ள முதல் ‘டி’ வடிவ சாலைச் சந்திப்பில் இடப்பக்கம் செல்லவேண்டும்.

நகரை அல்லது தீவு விரைவுச்சாலையை நோக்கிய தாம்சன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாற்றம் கிடையாது.

வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட, பாதிக்கப்பட்ட இடங்களில் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்