‘என்டியு’ உருவாக்கிய மின்விமானம்: முதற்கட்டச் சோதனையோட்டம் வெற்றி

‘என்டியு’ உருவாக்கிய மின்விமானம்: முதற்கட்டச் சோதனையோட்டம் வெற்றி

1 mins read
76e75cd9-2c61-4e64-8bc9-aa3257883447
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் குழு மின்விமானத்தை வடிவமைத்துள்ளது. - படம்: என்டியு
Google News Preferred Icon

சிங்கப்பூரில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மின்விமானம் வெற்றிகரமாக அதன் முதற்கட்ட சோதனையை முடித்துள்ளது. ஜெர்மனியின் கோ‌ஷ்ஸ்டெட்டில் அந்தச் சோதனை நிறைவேற்றப்பட்டது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இன்னாள், முன்னாள் மாணவர்களுடன் பேராசிரியர் ஜேம்ஸ் வோங் இணைந்து மின்விமானத்துக்கான மாதிரியை உருவாக்கினர்.

8 மீட்டர் இறக்கையுடன் கூறிய அந்த மின்விமானம், இப்போதைக்குப் பயணிகளை ஏற்றிசெல்வதற்காக வடிவமைக்கப்படவில்லை என்று பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.

ஜூலை இடம்பெற்ற இரண்டரை வார சோதனையின்போது 3 மீட்டர் நீளமுள்ள மாதிரி மின்விமானம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பறந்தது.

ஜெர்மானிய வான்வெளி நிலையத்தில் மின்விமானம் சோதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அதன் விமானத்தைச் செயல்படுத்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து பல்கலைக்கழகக் குழு அதிகாரபூர்வ சான்றிதழ்களை இன்னும் பெறவில்லை.

விமானத்தின் திறனை மேம்படுத்த குழு தொடர்ந்து சோதனைகளை நடத்தும் என்று பேராசிரியர் வாங் தெரிவித்தார்.

விமானத்துக்கு ஆற்றலூட்டவும் மின்கலன் திறனை மேம்படுத்தவும் ஹைட்ரஜனைப் பயன்படுத்த குழு முனைகிறது என்றார் அவர்.

சிங்கப்பூரில் வர்த்தகச் செயல்பாடுகளைத் தொடங்க முதலீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட $975 மில்லியனை உறுதிப்படுத்தி, சரியான திறனாளர்களைப் பணியமர்த்தி அரசாங்கத்திடமிருந்து போதுமான ஆதரவை பெறவேண்டும் என்று திரு வாங் தெரிவித்தார்.

ஜெர்மனியில் மின்விமானம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
ஜெர்மனியில் மின்விமானம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. - படம்: என்டியு
குறிப்புச் சொற்கள்