என்டியு மாணவர்களுக்கு விடுதி வாடகைக் கட்டணம் $50 வரை கூடுகிறது

1 mins read
8be9d834-4bc0-4f9f-9e2f-3bb6e43b3f78
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதி அறைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தனது மாணவர் விடுதி வாடகைக் கட்டணத்தை வரும் கல்விப் பருவத்தில் 12% வரை அதிகரிக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாடகை உயர்வு நடப்புக்கு வரும். குளர்சாதன வசதி இல்லாத இரண்டு படுக்கை அறைக்கான மாத வாடகை $319லிருந்து தொடங்கும்.

முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான அடுக்குமாடி அறை வாடகை மாதம் $688 வரை இருக்கும்.

இதற்குமுன், என்டியு அதன் மாணவர் விடுதி வாடகையை சென்ற ஆண்டில் 6.5% கூட்டியது. கடந்த 2020ஆம் ஆண்டிலும் 2021ஆம் ஆண்டிலும் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இதுபற்றி கருத்து கூறிய என்டியூ பேச்சாளர், பணவீக்கம், நிர்வாகச் செலவு, நடைமுறை செலவுக்கு ஏற்ப இருக்கும் வகையில் அறை வாடகை காலக்கிரம முறைப்படி மறுபரிசீலனை செய்யப்படுவதாகக் கூறினார்.

வாடகைக் கட்டண உயர்வு, மாணவர்கள் சிலரை வருத்தமடையச் செய்துள்ளது. புதிய கட்டணம் விலையுயர்ந்ததாக இருப்பதாகக் கூறும் அவர்கள், கட்டணத்தில் இடம்பெறும் மாற்றங்களைப் பல்கலைக்கழகம் சரிவர பகிரவில்லை எனக் குறைகூறுகின்றனர்.