தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒருமுறையோடு விலகிய 5 எம்.பி.க்கள்

2 mins read
8c2b99c6-d046-4769-a001-ac74a94d7706
இந்தத் தேர்தலில்தான் ஆக அதிகமாக 32 பேரை மசெக அறிமுகம் செய்திருக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்;ஸ

பொதுத் தேர்தல் வரும்போதெல்லாம் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஓய்வுபெறுவதும் புதியவர்கள் அறிமுகமாவதும் வழக்கம்.

அந்த வகையில், 2015 தேர்தலின்போது 14 மசெக எம்.பி.க்கள் ஓய்வுபெற்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் இருமுறை எம்.பி.யாக இருந்தவர்கள்

2020 தேர்தலுக்கு முன் 20 மசெக எம்.பி.க்கள் ஓய்வுபெற்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் ஒரு முறை எம்.பி. ஆனவர்.

இப்போது நடைபெற இருக்கும் தேர்தலுக்கு முன்னர் 20 மசெக எம்.பி.க்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர். அந்த எண்ணிக்கை மசெகவின் 83 எம்.பி.க்களில் 24 விழுக்காடு.

குறிப்பாக, ஒருமுறை மட்டுமே எம்.பி.யாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட ஐவர் ஓய்வுபெற்று உள்ளனர்.

அவர்களில் கேரீ டான், டெரிக் கோ ஆகிய இருவரும் நீ சூன் குழுத்தொகுதி எம்.பிக்களாக இருந்தவர்கள். இதர மூவர்: டான் வீ (சுவா சூ காங் குழுத்தொகுதி) ஃபாஹ்மி அலிமான் (மரின் பரேட் குழுத்தொகுதி) இங் லிங் லிங் (அங் மோ கியோ குழுத்தொகுதி).

அண்மைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில், ஒருமுறையோடு விலகிச் சென்றவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் அதிகம்.

ஓய்வுபெறுவோரை ஈடுகட்டும் வகையில் புதியவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மசெக அறிமுகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

2011 பொதுத் தேர்தலில் 24 பேரை அறிமுகம் செய்த அந்தக் கட்சி, 2015ல் 22 புதுமுகங்களையும் 2020ல் 27 புதுமுகங்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கியது.

இந்தத் தேர்தலில்தான் ஆக அதிகமாக 32 பேரை மசெக அறிமுகம் செய்திருக்கிறது.

மேலும் பிரதமராகப் பொறுப்பேற்ற ஒருவர் சந்திக்கும் முதல் தேர்தலில் ஆக அதிகமானவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது இப்போதுதான். திரு லீ சியன் லூங் பிரதமரான பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் 24 பேரும் அதற்கு முன்னர் திரு கோ சோக் டோங் பிரதமரானதும் நடைபெற்ற தேர்தலில் 11 பேரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஐந்து முறை வென்ற ஐவர்

தற்போது ஓய்வுபெற்றவர்களில் ஐவர் குறைந்தபட்சம் ஐந்து முறை எம்.பி.யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.

அந்த ஐவரும் அமைச்சர் பொறுப்புகளில் இருந்தவர்கள். திரு டியோ சீ ஹியன், டாக்டர் இங் எங் ஹென், டாக்டர் ஏமி கோர், திரு ஹெங் சீ ஹாவ், டாக்டர் மாலிக்கி ஓஸ்மான் ஆகியோர் அவர்கள்.

இவர்களில் திரு டியோ மட்டும் 1992ஆம் ஆண்டு முதல் ஏழு முறை தேர்தல் களம் கண்டு வென்றவர். மற்ற நால்வரும் 2001 தேர்தலில் அறிமுகம் ஆனவர்கள்.

விலகியோரில் திரு ஹெங் சுவீ கியட், திருவாட்டி ஃபூ மீ ஹார், திரு கான் தியாம் போ, திரு சீத்தோ யி பின் ஆகியோர் மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர்கள்.

இவர்களில் சீத்தோ யி பின், 2011 தேர்தலில் பொத்தோங் பாசிர் தொகுதியை திரு சியாம் சீ தோங்கிடம் இருந்து கைப்பற்றியவர். மேலும், அதன் பிறகு நடைபெற்ற இரு தேர்தல்களிலும் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டவர் அவர்.

குறிப்புச் சொற்கள்