உலகளாவிய தரவுக் கசிவுப் பட்டியலில் உள்ளூர் கல்வி நிலையங்களுடன் என்யூஎஸ்

உலகளாவிய தரவுக் கசிவுப் பட்டியலில் உள்ளூர் கல்வி நிலையங்களுடன் என்யூஎஸ்

1 mins read
‘ஷைனிஹன்டர்ஸ்’ என்ற இணைய மோசடிக் கும்பல் இதற்குக் காரணம்
bb5a7b07-58f1-4755-8cc0-3ed846af74f7
கேன்வஸ் எனப்படும் மாணவர் கல்விப் பயிற்சித் தளத்தை இணையத் தாக்குதல் முடக்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இயங்கும் கல்வி நிலையங்கள் உலகளாவிய தரவுக் கசிவுப் பட்டியலில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதுகுறித்து வெள்ளிக்கிழமை (மே 8) வெளிவந்த பட்டியலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உள்ளது.

சிங்கப்பூர் காப்புறுதிக் கல்லூரி (SCI), சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ISCA) ஆகிய இந்த இரண்டு கல்வி நிலையங்களும் அப்பட்டியலில் உள்ளன.

வியாழக்கிழமை (மே 7) தொடங்கிய இணையத் தாக்குதலில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகம் ஆகிய பெரும் கல்வி அமைப்புகளும் பாதிக்கப்பட்டன. அதற்கு முன்பாக அக்கல்வி நிலையங்களின் தரவுகள் கசியத் தொடங்கின.

கல்விக் கழகங்களில் பொதுவாக மாணவர்கள் இணைந்து பயிற்சிபெரும் கேன்வாஸ் எனப்படும் கல்வித் தளத்தை இணையத் தாக்குதல் முடக்கியது.

இணைய மோசடிக் கும்பலின் மிரட்டல்

2019ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பணம்பறிக்கும் ‘ஷைனிஹன்டர்ஸ்’ என்ற கும்பல் தரவுக் கசிவுக்கும் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டது.

அந்த மோசடிக் கும்பலிடம் இருந்து ‘ரெட்டிட்’ சமூக ஊடகத் தளத்தில் அனுப்பப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் செய்தியில், பாதிக்கப்பட்டக் கல்வி நிலையங்களின் தரவுகள் கசியவிடப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அவ்வாறு பாதிப்படைந்த பள்ளிகள் தரவுக் கசிவைத் தவிர்க்க இணைய ஆலோசனை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, தனிப்பட்ட முறையில் டிஓஎக்ஸ் (TOX) தளத்தை நாடி தீர்வுக்கான பேச்சைவார்த்தை நடத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதில் தீர்வு என்பது, கும்பலின் மிரட்டலுக்குப் பணிந்து பணம் செலுத்த வேண்டியதையே குறிக்கும்.

குறிப்புச் சொற்கள்