மாபெரும் ஆய்வு முயற்சியில் இறங்கும்என்யுஎஸ்: கார்பன் உறிஞ்சும் நுண்ணுயிர்

1 mins read
ca15270b-5dc8-455f-baaa-3420145530be
பேராசிரியர் லியு பின் (இடம்), இணைப் பேராசிரியர் மாத்திவ் சாங் ஆகிய இருவரும் அக்டோபர் 10ஆம் தேதி முன்னோடி சோதனையில் தயாரிக்கப்பட்ட பொருள்களை ஆய்வு செய்கின்றனர்.. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், 120 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பெரிய ஆய்வு முயற்சி ஒன்றில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

கரிமம் உறிஞ்சும் நுண்ணுயிர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி சிறப்பு ரசாயன உற்பத்தியிலிருந்து நீடித்த நிலையான விமான எரிபொருள் வரை உற்பத்தித் துறையை பசுமை சூழல் சார்ந்த இடமாக மாற்றுவது ஆய்வின் நோக்கமாகும்.

செயற்கை உயிரியல் என்று பரவலாக அழைக்கப்படும் இது வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இதில் ஆராய்ச்சியாளர்கள் மரபணுவை மாற்றியமைத்து விரும்பிய இறுதி பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கரிமம் உறிஞ்சும் நுண்ணுயிர்களை பொருளியல் ரீதியாக சாத்தியமாகக் கூடிய வழியில் உற்பத்தி செய்ய முயற்சி செய்வார்கள். இவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தி ரசாயனம் முதல் பலதரப்பட்ட பொருள்களைத் தயாரிக்க முடியும் என்று என்யுஎஸ் துணைத் தலைவர் (ஆய்வு, தொழில்நுட்பம்) பேராசிரியர் லியு பின் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் நடைமுறையிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

ஏற்கெனவே ஜூரோங் தீவை நீடித்த ரசாயன, சுத்திகரிப்பு நிலையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் ஆய்வு இதற்கு பேருவிதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக உதவித் தலைவரான லிம் வே லென், தயாரிப்புத் துறை, அதிக நீடித்த நிலைத்தன்மைமிக்க பொருள்களைத் தயாரித்து சிங்கப்பூரின் பசுமை இலக்குக்கு பங்களிக்க செயற்கை உயிரியல் சாத்தியமான வழியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்