உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் வந்துள்ள சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் வந்துள்ள சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

1 mins read
0db4eab5-8571-4c17-988e-df5ceb8ef931
குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் எட்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) முதன்முறையாக முதல் பத்து நிலைகளில் இடம்பிடித்துள்ளது.

பிரிட்டனில் தளம் கொண்டுள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் (கியூஎஸ்) 2024ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் அது எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2023ஆம் ஆண்டின் பட்டியலில் அது 11வது இடத்தைப் பிடித்திருந்தது.

என்யுஎஸ் தலைசிறந்த ஆசியப் பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது. 2024ஆம் ஆண்டின் பட்டியலில் முதல் பத்து நிலைகளில் இடம்பெற்றுள்ள முதல் ஆசியப் பல்கலைக்கழகம் என்ற சிறப்பையும் அது பெற்றுள்ளது.

அந்தப் பட்டியலில் அமெரிக்காவையும் பிரிட்டனையும் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

அமெரிக்காவின் மேசசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எம்ஐடி) முதல் இடம் பெற்றுள்ளது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டாவது நிலையிலும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது நிலையிலும் உள்ளன.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் முறையே நான்காம், ஐந்தாம் நிலைகளில் உள்ளன.

பல்வேறு மதிப்புமிக்க உலகப் பல்கலைக்கழகங்களைப் பின்னுக்குத் தள்ளி, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து நிலைகளில் என்யுஎஸ் முதன்முறையாக இடம்பெற்றிருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று அதன் தலைவர் டான் எங் சாய் கூறினார்.

குறிப்புச் சொற்கள்