நிதி திரட்டு முயற்சியில் ‘என்யுஎஸ் ஹை’

2 mins read
7d9ac0dd-7c5a-4d7c-b22b-2e89d038b1ce
‘என்யுஎஸ் ஹை’ பள்ளியின் 20வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள அதன் வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்றது. அதன் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆய்வுகளை நடத்தவும் பள்ளி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளவும் என்யுஎஸ் ஹை கணிதம், அறிவியல் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்க நிதி திரட்டு முயற்சியில் அப்பள்ளி இறங்கியுள்ளது.

இந்த நிதி திரட்டுக்கு ‘என்யுஎஸ் ஹை கிவிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களில் மாணவர்கள் பங்கெடுப்பதைச் சாத்தியமாக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக ‘என்யுஎஸ் ஹை’ கூறியது.

இதன்மூலம் விண்வெளிப் பொருளியல், செயற்கை நுண்ணறிவு இயந்திரவியல், அணுவாயுத அறிவியல் போன்ற துறைகளைச் சேர்ந்த திட்டங்களில் மாணவர்கள் பங்கெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்கத்துக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

‘என்யுஎஸ் ஹை’ பள்ளிப் படிப்பை முடிக்க வெளிநாட்டு ஆய்வுக் கழகங்களை நேரில் சென்று அனுபவம் பெறவும் இவற்றை மாணவர்கள் கட்டாயமாகlg பூர்த்தி செய்ய வேண்டும்.

என்யுஎஸ் ஹை அதன் 20வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.

நிதி திரட்டு மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ அது திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், என்யுஎஸ் ஹை பள்ளியின் 20வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள அதன் வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.

நிலையற்ற சூழலில் உண்மைத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசினார்.

“எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையைக் கண்டுபிடிக்கப் பாடுபட வேண்டும். உண்மையைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான பொறுப்பாகும்,” என்றார் அதிபர் தர்மன்.

நிகழ்ச்சியின்போது இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

‘என்யுஎஸ் ஹை கிவிங்’ அதில் அடங்கும்.

‘என்யுஎஸ்எச்Sat1’ எனும் சிறிய செயற்கைக்கோளை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி வைப்பது மற்றொரு திட்டமாகும்.

இச்செயற்கைக்கோளை என்யுஎஸ் ஹை மாணவர்கள் உருவாக்கினர்.

குறிப்புச் சொற்கள்