இனம் குறித்து மாணவி சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் என்யுஎஸ் விசாரணை

இனம் குறித்து மாணவி சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் என்யுஎஸ் விசாரணை

2 mins read
மாணவியின் பேச்சு சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது
09c8225d-2cf0-4fa3-9dba-4417b35cc0d1
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) அடையாளச் சின்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மாணவர் தலைவர் பொறுப்பில் இருந்த மாணவி, மற்றொரு மாணவரின் இனம் குறித்து தரக்குறைவாக டெலிகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை பல்கலைக்கழகம் விசாரித்து வருகிறது.

அந்தப் பதிவு வெகுவாகப் பலரால் பகிரப்பட்டு, சமூக ஊடகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாணவி தற்போது மாணவர் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டார்.

மாணவிமீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி இணையத்தில் பலர் ஒன்றிணைந்து மனு ஒன்றை வெளியிட்டதன் விளைவாக பல்கலைக்கழகம் விசாரணையை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள்ளாக அந்த மனுவில் 686 கையெழுத்துகள் பெறப்பட்டன.

டெலிகிராமில் வெளிவந்த முதல் காணொளியில், மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் பற்றி அறிமுகம் செய்யும் திட்டத்தின் தலைவியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர் என்யுஎஸ்ஸில் தாம் தங்கியிருந்து பயிலும் மாணவி என்று தெரிவித்தார்.

பிறகு, குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த கருத்துகளையும் குறைபாடுகளையும் கூறிவிட்டு, தான் இனவாதி அல்ல என்று குறிப்பிட்டுக் காணொளியை முடித்துக்கொண்டார். அந்தக் காணொளி ஏப்ரல் 2ஆம் தேதி இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டது. அதேநாளில் அவர் டெலிகிராமில் இரண்டாம் காணொளியையும் பதிவிட்டார்.

அனைத்துலக மாணவர்கள் குறித்து இனவாதக் கருத்து

அக்காணொளியில், சில நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் பேசும் மொழி தமக்குப் புரியவில்லை என்று குறைபட்டுக்கொண்டார். அவரது காணொளிகள் டிக்டாக் போன்ற வேறு பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, ரெட்டிட் எனப்படும் இணைய விவாத தளத்திலும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்