ஒரே வாரத்தில் $100 பில்லியன் முதலீட்டைக் கடந்த சிங்கப்பூர் ஓசிபிசி வங்கிப் பங்குகள்

ஒரே வாரத்தில் $100 பில்லியன் முதலீட்டைக் கடந்த சிங்கப்பூர் ஓசிபிசி வங்கிப் பங்குகள்

1 mins read
fe50b408-0811-4945-9547-2194befbce64
ஓசிபிசி வங்கியின் பங்குகள் இதுவரை இல்லாத அளவில் $22.83 என்ற நிலையை எட்டியது. - படம்: சாவ்பாவ்

ஓசிபிசி வங்கி, சந்தை முதலீட்டில் முதன்முறையாக இந்த வாரம் $100 பில்லியனைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கிலிருந்து வந்த உத்தேசச் சொத்துகள், சேமிப்புக் கணக்கில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஆகியவற்றால் அந்த நிலையை வங்கியால் எட்ட முடிந்தது.

மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் வங்கியின் பங்குகள் முதன்முறையாக $22 என்ற இலக்கைத் தாண்டியது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 2) நிலவரப்படி ஓசிபிசி வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு $22.83 என்ற நிலையை எட்டியது.

டிபிஎஸ் வங்கியின் பங்குகள் 0.2 விழுக்காடு சரிந்து $57.43ஆக முடிந்தது. யுஓபி பங்குகள் ஒரு விழுக்காடு சரிந்து $36.67ஆனது.

மத்திய கிழக்குப் பூசலால் சிங்கப்பூரில் செய்யப்படும் முதலீடுகளால் உள்ளூர் வங்கிகள் பலனடையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்