ஓசிபிசி வங்கியின் கைப்பேசி, இணைய வங்கிச் சேவைகள் உள்ளிட்டவை கட்டமைப்புப் பிரச்சனைகளால் தற்போது செயலிழந்துள்ளன.
காலை 9.45 மணி அளவில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தனது கைப்பேசி, இணைய வங்கிச் சேவைகள், பேநவ், ஏடிஎம், வங்கியின் மின்னிலக்க வர்த்தக வங்கித் தளமான வெலோசிட்டி முதலியவை பாதிக்கப்பட்டிருப்பதாக ஓசிபிசி கூறியது.
அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும் ஓசிபிசி கூறியது.
பயனீட்டாளர்கள் உடனடிப் பரிவர்த்தனைகளுக்குத் தனது கிளைகளை நாடலாம் என்று ஓசிபிசி தெரிவித்தது.
வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் காலை சுமார் ஒன்பதரை மணியிலிருந்து பிரச்சனைகளை எதிர்நோக்கியதாகப் பயனீட்டாளர்கள் கூறினர்.
இந்நிலையில் பயனீட்டாளர்களின் தரவுகளும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாய் ஓசிபிசி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


