தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்டுநரில்லாப் பேருந்துகளில் பயணிகளுக்கு உதவ அதிகாரி இருப்பார்: சுன் ஷுவெலிங்

1 mins read
86c64a68-1918-43e2-bfc1-ad669d333fc1
வாகனத்தில் ஏறவும் இறங்கவும் பயணத்தைத் திட்டமிடுவதற்கு உதவவும் பேருந்துச் சந்திப்புகளில் ஊழியர்கள் இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஓட்டுநரில்லா வாகனங்கள் பயன்படுத்தப்படுவதற்கான சோதனை ஓட்டத்தின்போது, பயணிகளுக்கு உதவுவதற்காகப் பேருந்துகளில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இருப்பார் எனப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.

மேலும், வாகனத்தில் ஏறவும் இறங்கவும் பயணத்தைத் திட்டமிடுவதற்கு உதவவும் பேருந்துச் சந்திப்புகளில் ஊழியர்கள் இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், ஆங்கிலத்தில் புலமை இல்லாதோர், உடற்குறையுள்ளோர், கைக்குழுந்தைகளுடன் வருவோர் ஆகியோர் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஓட்டுநரில்லா வாகனத்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து விவரிக்கும்படி ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி டெனிஸ் புவா கேட்டார்.

அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது திருவாட்டி சுன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

“எட்டு இருக்கைகள் கொண்ட தானியங்கிப் பேருந்து போன்ற பெரிய வாகனங்களில் மட்டுமே மடிந்த சக்கர நாற்காலிகளைத் தற்போது வைக்க இடம் இருக்கிறது. காலப்போக்கில், இதுபோன்ற வசதிகள் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும்,” எனத் திருவாட்டி சுன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்