காவல்துறையின் கடலோரக் காவற்படையின் அனைத்து தளங்களிலும் உள்ள எண்ணெய் குழாய்களிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பிப்ரவரி 5ஆம் தேதி சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள காவல்துறையின் கடலோரக் காவற்படை பிரானி வட்டாரத் தளத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட அடுத்த நாளே பிரானி வட்டாரத் தளத்தில் அனைத்து எண்ணெய் குழாய்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதையடுத்து லோயாங், லிம் சூ காங், கல் ஆகிய மூன்று வட்டாரத் தளத்தில் அனைத்து எண்ணெய் குழாய்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
சோதனைகளை திங்கட்கிழமைக்குள் (பிப்ரவரி 10) முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பிரானி வட்டாரத் தளத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 23 டன் டீசல் கடல்நீரில் கலந்தது.
எண்ணெய்க் கசிவு பிப்ரவரி 5ஆம் தேதி முற்பகல் 11.40 மணியளவில் கண்டறியப்பட்டு, பின்னர் அன்று பிற்பகல் 3.40 மணியளவில் அது தனியாக ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின்னர் அப்பகுதியில் எண்ணெய்க் கசிவு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.