சிங்கப்பூரில் எண்ணெய் விலை 2வது நாளாக குறைந்தது

சிங்கப்பூரில் எண்ணெய் விலை 2வது நாளாக குறைந்தது

1 mins read
44cd2ae7-c3e7-40cd-9a9f-d1e11469fd0f
நான்கு எண்ணெய் நிறுவனங்களைப் பின்பற்றி எஸ்ஸோவும் வெள்ளிக்கிழமை டீசல் விலையில் 5 காசு குறைத்தது. - படம்: ஏஷியா ஒன்

சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது.

முந்தைய நாளில் கால்டெக்ஸ், ஷெல், சினோபெக், ஸ்மார்ட் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் விலையைக் குறைத்தன. இதையடுத்து எஸ்ஸோ நிறுவனமும் எண்ணெய் விலையைச் சரி செய்தது.

எஸ்ஸோ அதன் டீசல் விலையை ஐந்து காசு குறைத்து ஒரு லிட்டர் 4.32 வெள்ளிக்கு விற்கப்பட்டது. ஆனால் பெட்ரோல் விலையை அது மாற்றவில்லை.

விலை மாற்றத்தின் ஒரு பகுதியாக டீசலின் விலை ஸ்மார்ட் எனர்ஜியின் 2.71 வெள்ளியிலிருந்து கால்டெக்ஸ், எஸ்ஸோ, எஸ்பிசியில் 4.32 வெள்ளி வரை உள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான எஸ்பிசி மட்டும் மே 5 ஆம் தேதியிலிருந்து விலையில் மாற்றம் செய்யாமல் உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 வெள்ளியாக இருக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவு அதன் விலை 90 வெள்ளிக்குக் கீழ் இறங்கியது.

சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வியாழக்கிழமை ஈரான்மீதான திட்டமிட்ட தாக்குதலை அமெரிக்க அதிபர் ரத்து செய்தார்.

ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறியதைத் தொடர்ந்து எண்ணெய்ச் சந்தையில் மாற்றமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் 15வது வாரமாக தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்