மத்திய கிழக்கில் சிக்கியிருந்த எண்ணெய்க் கப்பல்கள் சிங்கப்பூர் வந்தடைந்தன

மத்திய கிழக்கில் சிக்கியிருந்த எண்ணெய்க் கப்பல்கள் சிங்கப்பூர் வந்தடைந்தன

2 mins read
ea55eb27-655a-4883-b3d3-981c74b04b26
கிரேக்க நாட்டுக் கொடியுடன் வந்த ‘மியாவ்லிஸ் 21’ என்ற எண்ணெய்க் கப்பல், சிங்கப்பூரில் தனது சரக்கை இறக்குவதற்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது. - படம்: எனசெல் குழுமம்/ஃபேஸ்புக்

அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதம் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதிலிருந்து, ஒரு முக்கிய நீர்வழிப்பாதையில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், பல மாதங்களாக மத்திய கிழக்கில் சிக்கியிருந்த கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளன எனக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.

பிப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதியன்று அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கான ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தை அறிவித்தனர்.

முக்கியச் செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டிய மதிப்பீடுகளின்படி, மத்திய கிழக்கில் சிக்கியிருந்த சில கப்பல்கள் பின்னர் அந்த நீரிணையை விட்டு வெளியேற கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டதால், போக்குவரத்துப் போருக்கு முந்தைய நிலைகளில் இருந்த விகிதம் ஐந்தில் ஒரு பங்கு முதல், மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்துள்ளது.

அவற்றுள், சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் அடங்கும். அவை வந்து சேர நான்கு மாதங்கள் வரை ஆனது என உலகளாவிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளமான கேப்லர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளது.

விலை அறிக்கை நிறுவனமான ஆர்கஸ் மீடியாவின் ஆசிய வட்டார கச்சா எண்ணெய் விலை நிர்ணயப் பிரிவுத் தலைவர் ஃபேபியன் இங், மத்திய கிழக்கிலிருந்து வரும் ஒரு கச்சா எண்ணெய் சரக்கு, இயல்பான சூழ்நிலைகளில் சிங்கப்பூரை வந்தடைய பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என்று கூறினார்.

கிரேக்க நாட்டுக் கொடியை ஏந்தியுள்ள ‘மியாவோலிஸ் 21’ என்ற எண்ணெய்க் கப்பல், ஒரு மில்லியன் பேரல்கள் பஸ்ரா நடுத்தர கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றது.

இந்த எண்ணெயைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், மண்ணெண்ணெய் ஆகியவற்றைத்  தயாரிக்கலாம்.

இதற்கிடையே, லைபீரியக் கொடியை ஏந்திய ‘விஎல் பிரைம்’ கப்பலில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான ‘அப்பர் ஸாக்கும்’ ரக பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அது ஜூலை 6ஆம் தேதி சிங்கப்பூரை வந்தடைந்து, எக்ஸான்மோபில் சுத்திகரிப்பு நிலையத்தில் தனது சரக்குகளை இறக்கியதாகக் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்க் கப்பல்நீரிணைஈரான்

தொடர்புடைய செய்திகள்