துவாஸ் அவென்யூ 3 தீச்சம்பவத்தில் ஒருவர் உயிர் இழந்தார்

துவாஸ் அவென்யூ 3 தீச்சம்பவத்தில் ஒருவர் உயிர் இழந்தார்

1 mins read
8a625805-7278-46eb-a385-5131bf6a5ba5
21 துவாஸ் அவென்யூ 3ல் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு காலை 9.05 மணிக்குத் தகவல் கிடைத்தது. படம்: சாவ்பாவ் -

துவாஸ் அவென்யூ 3ல் தீச்சம்பவத்தில் இன்று (டிச. 30) காலை ஒருவர் உயிரிழந்தார்.

தீச்சம்பவத்துக்கு எரிவாயு உருளைகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.

21 துவாஸ் அவென்யூ 3ல் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு காலை 9.05 மணிக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற

தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

38 வயது ஆடவர் உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் கூறினார்.

43 வயது ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் இருந்த நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் செல்வதற்கு முன்னர் சுமார் 40 பேர் அந்த இடத்திலிருந்து தாமாகவே வெளியேறினர்.

அவ்விடத்தில் வேலையிட விபத்து ஏற்பட்டதாக காலை 9 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.