மேரிமவுண்ட் சாலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31ஆம் தேதி) அன்று கனரக வாகனம் கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தனக்கு காலை கிட்டத்தட்ட 10.50 மணிக்கு தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அது தெரிவித்தது.
இந்த விபத்து குறித்து தெரிவித்த காவல்துறை, மேரிமவுண்ட் சாலையிலிருந்து தாம்சன் சாலையை நோக்கிய பாதையில் கனரக வாகனம் கவிழ்ந்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்ததெனக் கூறியது.
இதில் 50 வயது வாகன ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது தெரிவித்தது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.