பிடோக்கில் கார், மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் காயம்

பிடோக்கில் கார், மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் காயம்

1 mins read
4904b12b-8405-4b02-a555-fdcce6af0092
மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஆடவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே ஃபேஸ்புக்

பிடோக் சென்ட்ரல் - பிடோக் நார்த் அவென்யூ 3 சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, 52 வயதுடைய ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

‘எஸ்ஜிஆர்வி அட்மின்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட கார் கேமரா காணொளியில், பச்சை நிற ஆடை அணிந்த ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்காகக் காத்திருக்கும்போது ​​சந்திப்பை நெருங்கும் வேளையில் வேகத்தைக் குறைப்பது தெரிகிறது. அவர் ஒரு விநியோக ஊழியர் என்று நம்பப்படுகிறது.

பின்னர், மோட்டார்சைக்கிளுக்குப் பின்னால் வந்த ஒரு வெள்ளை கார், அந்த ஓட்டுநரின் பின்புறத்தில் மோதியதில் அவர் கீழே விழுகிறார். அதைத் தொடர்ந்து, ஓட்டுநர் உதவி செய்வதற்காகக் காரிலிருந்து வெளியே வருகிறார்.

விபத்து தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் நண்பகல் 12.10 மணியளவில் அந்த விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.

52 வயதான ஆண் மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே சமயம், 68 வயதான ஆண் கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்