மூவரில் ஒருவருக்கு மனவுளைச்சல்: மனிதவள அமைச்சின் இணையத் தரவு

2 mins read
422d9db4-965b-4ed6-9dde-0f3f4287a11a
ஐவொர்க்ஹெல்த் தொடங்கியதிலிருந்து வேலையிடத்தில் மனவுளைச்சல் அல்லது சோர்வு பற்றி தெரிவித்துள்ளோரின் விகிதம் சீரான நிலையில் இருந்துள்ளது எனவும் நிதி அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளருமான ஷான் ஹுவாங் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

பல அமைப்புகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு செயல்படுத்தும் இலவச இணைய மதிப்பீட்டு தரவுகளின் வழியாக, ஊழியர்கள் 2024ஆம் ஆண்டில் வேலை சார்ந்த மனவுளைச்சல் பற்றி தெரிவித்துள்ளனர்.

“ஐவொர்க்ஹெல்த்” (iWorkHealth ) எனப்படும் அந்த தரவுத் தளத்தில், சிங்கப்பூரின் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மனவுளைச்சல் ஏற்பட்டதாகப் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும், முதலாளிகள் இந்தப் பதிவுகளை கட்டாயமாக்காத நிலையில் குறிப்பிட்ட துறைகளில் உள்ள அல்லது ஒட்டுமொத்த ஊழியர்களின் மனநிலையை முழுமையாக இது பிரதிபலிக்காது என்று மனிதவள அமைச்சின் மூத்த செயலாளர் ஷான் ஹுவாங் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) எச்சரித்தார்.

குறிப்பாக அதிக ஊழியர்கள் தேவைப்படும் துறைகள் உள்பட மன அழுத்தத்தைத் தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றிய தரவுகள் உள்ளனவா என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சார்லின் சென் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு திரு ஷான் பதிலளித்தார்.

மனிதவள அமைச்சு திட்டமிட்டு, வேலையிட மனவுளைச்சலைப் பற்றிய தரவுகளை சேகரிப்பதில்லை என்றும் அவர் விளக்கினார். மார்ச் 2021ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சு, வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம், மனநலக் கழகம், சாங்கி பொது மருத்துவமனை, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஐவொர்க்ஹெல்த் இணையச் சேவையை அறிமுகம் செய்தன.

நிதி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான ஷான் ஹுவாங், ஐவொர்க்ஹெல்த் தொடங்கியதிலிருந்து வேலையிடத்தில் மனவுளைச்சல் அல்லது சோர்வு பற்றி தெரிவித்துள்ளோரின் விகிதம் சீரான நிலையில் இருந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்