முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் வழக்குடன் தொடர்புடைய பெருஞ்செல்வந்தர் மீது விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதியன்று அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குற்ற ஒப்பதலை அவர் தள்ளிவைத்துள்ளார்.
79 வயது ஓங்கின் மருத்துவ அறிக்கைகளைப் பெற கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கைகளைப் பெற்று அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் அவற்றை அரசாங்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்று ஓங்கின் செய்தித்தொடர்பாளர் புதன்கிழமை (மார்ச் 26) தெரிவித்தார்.
“ஏப்ரல் 2ஆம் தேதியன்று ஓங் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குற்ற ஒப்புதல் இன்னொரு நாளுக்குத் தள்ளிவைக்கப்படும். மருத்துவ அறிக்கைகள் கிடைத்ததும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார்,” என்று செய்தித்தொடர்பாளர் கூறினார்.
ஓங்கை வழக்கறிஞர் குழு பிரிதிநிதிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் மூத்த வழக்கறிஞர் கல்விந்தர் புல்லும் திரு ஏரன் லீயும் அடங்குவர்.