ஆக அண்மைய ஏலக்குத்தகையில், பொதுப் பிரிவு வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $152,000ஐ எட்டியது. இந்தப் பிரிவிற்கான சிஓஇ கட்டணம் தொடர்ந்து ஐந்தாவது முறையாகப் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1,600 சிசி வரையிலான இயந்திரங்களைக் கொண்ட சிறிய கார்களுக்கும் 110 கிலோவாட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்வாகனங்களுக்குமான சான்றிதழ் கட்டணம் $104,000ஆகக் குறைந்தது.
பெரிய கார்களுக்கான சான்றிதழ் கட்டணமும் $146,002 எனப் புதிய உச்சத்தை எட்டியது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த $140,889ஐ காட்டிலும் இது 3.63 விழுக்காடு அதிகம்.
வர்த்தக வாகனப் பிரிவுக்கான சான்றிதழ் கட்டணம் 2.5 விழுக்காடு கூடி $85,900ஆக உயர்ந்தது.
மோட்டார்சைக்கிளுக்கான சான்றிதழ் கட்டணம் 1.46 விழுக்காடு அதிகரித்து, $10,856 என்றானது.