‘ஏஐ’ திறன்களை மேம்படுத்த ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் $300 மில்லியன் ஒதுக்கீடு

‘ஏஐ’ திறன்களை மேம்படுத்த ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் $300 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
5933cc5f-fd96-4e95-8304-2863b74a53f8
புரிந்துணர்வு ஒப்பந்தப் கையெழுத்திடும் நிகழ்வில், இடமிருந்து) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சிங் கை ஃபோங், OpenAI-யின் தலைமை வருவாய் அதிகாரி டெனிஸ் டிரெஸ்ஸர், OpenAI-யின் தென்கிழக்கு ஆசிய வட்டார பொதுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் சேண்டி குன்வதனகர்ன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சேட்ஜிபிடியை உருவாக்கிய ‘ஓப்பன்ஏஐ’ (OpenAI) நிறுவனம், உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை அன்றாடப் பணிப்பாய்வுகளில் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும்.

அதன் தொடர்பில், வளர்ந்து வரும் துறையான சிங்கப்பூரின் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவுத் துறையைக் கட்டமைப்பதற்காக $300 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியே அதன் முதல் ஆய்வகமான ‘ஓப்பன்ஏஐ’, சிங்கப்பூர் பயன்பாட்டு ‘ஏஐ’ ஆய்வகத்தைத் திறப்பது இந்தத் திட்டத்தின் மையமாகும். இந்த ஆய்வகம், இங்குள்ள பொதுச் சேவைகள், நிதி மற்றும் சுகாதாரத் துறைகள், மின்னிலக்க உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ‘ஏஐ’ பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

இந்த $300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை.

புதன்கிழமையன்று (மே 20), ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுடன் ‘சிங்கப்பூருக்கான ஓப்பன்ஏஐ’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம், ஒத்துழைப்பின் மூன்று தூண்களைக் கொண்டுள்ளது. கபெல்லா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற ஆசியா டெக் x சிங்கப்பூர் மாநாட்டின் ஒரு பகுதியான ATxSummitல் இந்தப் பங்காளித்துவம் கையெழுத்தானது.

“’சிங்கப்பூருக்கான ‘ஓப்பன்ஏஐ’ மூலம், முன்னணி செயற்கை நுண்ணறிவிலிருந்து மேலும் பல நிறுவனங்கள் பயனடைய உதவவும், அடுத்த தலைமுறை உள்ளூர் செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்களை ஆதரிக்கவும், நாடு முழுவதும் இந்தக் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி டெனிஸ் டிரெஸ்ஸர் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவு பொருளியல்கள், வணிகங்கள் மற்றும் ஊழியரணியை மறுவடிவமைத்து வருவதால், சிங்கப்பூர் தனது பங்குக்குப் புதிய துறைகளை வளர்ப்பது, உலகளாவிய முன்னணி நிறுவனங்களை இங்கு நிலைநிறுத்துவது, இந்தப் புதிய சூழலில் வளர்ச்சிக்குத் தேவையான திறன்களுடன் நமது மக்களைத் தயார்படுத்துவதாக உள்ளது,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சிங் கை ஃபோங் கூறினார்.

‘ஓப்பன்ஏஐ’ உடனான இந்தப் பங்காளித்துவம், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதை வலுப்படுத்துவதற்கும், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

‘ஓப்பன்ஏஐ’ சிங்கப்பூர் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் ஒரு முக்கியத் தூணாகும். இது, களப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொறியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்ட ஒரு பிரத்தியேகக் குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய பணியிடங்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுதகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுநிறுவனம்