தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15வது நாடாளுமன்றம்: முக்கியப் பிரச்சினைகளில் உறுப்பினர்கள் கருத்து

2 mins read
fd8ef6e0-3035-4f43-aa56-dc7f91e5eb6a
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க நாளில் முக்கிய பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்தைக் கூறிய (மேலே, இடமிருந்து) இந்திராணி ராஜா, ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், டின் பெய் லிங், ஷோன் லோ, ஹமித் ரசாக், டேவிட் ஹோ ஆகியோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) அதிபர் உரையுடன் கூடியது.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தில் 99 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தொடர்புகொண்டபோது சிங்கப்பூர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்தைக் கூறினர்.

அரசு தரப்பில் மன்றத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா உலகம் நிச்சயமற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளதை நினைவுகூர்ந்தார்.

“நாடாளுமன்றம் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். முனைப்புடன் விவாதித்து, கொள்கைகளை பரிசீலித்து சிங்கப்பூரை பாதுகாப்பாக கொண்டு செல்லக்கூடிய கருத்துகளைக் கூற வேண்டும்,” என்று திருவாட்டி இந்திராணி ராஜா கூறினார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியது தம்மைக் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் முதல் வரிசைக்கு முன்னேறியுள்ள சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் 2026ஆம் ஆண்டு வெளியுறவு, சமூக, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சராக பொறுப்பேற்பார். இரண்டாம் தவணை உறுப்பினராக உள்ள இவர், அதிபர் தமது உரையில் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சிங்கப்பூரை கருத்தில்கொண்டு, இனம், சமயம், சமய நெறிமுறைகளில் இருக்கும் வித்தியாசங்களில் மூழ்கி விடாமல், அணுக வேண்டும் என்று கூறியது தம்மைக் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.

மரின் பரேடு- பிரேடல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் நாலாவது முறையாக மன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள திருவாட்டி டின் பெய் லிங், மாறிக்கொண்டே இருக்கும் நிச்சயமில்லாத உலகில் நிலைத்தன்மையான, நம்பகமான நாடாக உருவெடுத்து உலகுக்கு நம்பிக்கை ஒளி அளிக்கலாம் என்று சொன்னார்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினராக முதல் முறை தேர்வு பெற்றுள்ள ஷோன் லோ என்பவர், அதிபரின் உரை புதிய ஆட்சிக்காலத்தில் அரசின் லட்சியத்தை மேல்நிலைக்குக் கொண்டு செல்வதாக உள்ளது என்றார். அதில் அரசாங்கம் வெற்றி பெறுவது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பு மட்டுமல்ல அதை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றார். வருவாய் ஏற்றத்தாழ்வை அனைவரும் இணைந்து சமாளிக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.

முதல் முறையாக தேர்வாகியுள்ள வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான டாக்டர் ஹமித், அதிபர் உரையில் தம்மை ஈர்த்த அம்சம் ஒருவர் பிறப்பால் அவருடைய எதிர்காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் எந்தவொரு சிங்கப்பூரரும் பின்தங்கி விடப்படமாட்டார் என அவர் கூறியதும் என்றார்.

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்குமா என்றும் மூப்படைவோர் தங்கள் ஓய்வுக்காலத்தில் போதுமான சேமிப்பு இருக்குமா என்பது குறித்தும் கவலை கொண்டுள்ளதாக அவர் விளக்கினார். இவையே தமது குடியிருப்பாளர்கள் முக்கிய பிரச்சினைகள் என எடுத்துரைத்ததாக கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்தர்மன் சண்முகரத்னம்