தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி இனி மூர்க்கமாகவும் துணிச்சலோடும் செயல்படப்போவதாக கட்சித் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங் சனிக்கிழமை (மே 3) கூறினார்.
“குறிப்பிட்ட இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது மாயை,” என்று கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளின் மாதிரி வாக்குகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டபோது திரு இங் குறிப்பிட்டார்.
“நாங்கள் இனி பெருந்தன்மையுடன் இருக்கப் போவதில்லை,” என்ற அவர், எதிர்க்கட்சி அதைப் பயன்படுத்தி எங்கள் தலை மேல் ஏறி செல்கிறார்காள்,” என்றார் அவர்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி பன்முனைப் போட்டி நிலவிய செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தல் எல்லைகள் மறுஆய்வு செய்யப்பட்டதை அடுத்து இதர எதிர்க்கட்சிகளும் அங்குப் போட்டியிட முன்வந்தன.
இருப்பினும், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங், தெம்பனிஸ் ஆகிய இரண்டு குழுத்தொகுதிகளிலும் கடந்த தேர்தலிலிருந்து போட்டியிட்டு வருகிறது.
செம்பவாங் குழுத்தொகுதியில் கட்சி இந்த முறை 2.32% வாக்குகளை மட்டும் பெற்றது. மக்கள் செயல் கட்சி 67.75% வாக்குகளையும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 29.93% வாக்குகளையும் கைப்பற்றின.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்குமுனைப் போட்டியில் களமிறங்கிய தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 0.18% வாக்குகளைப் பெற்றது. மக்கள் செயல் கட்சி 52.02% வாக்குகளைப் பெற்று குழுத்தொகுதியைத் தக்கவைத்தது.
தேசிய ஒருமைப்பாட்டு அணிகள் குறைந்தபட்ச 12.5% வாக்குகளைப் பெற தவறியதால் தேர்தல் முன்பணத்தை அவை இழக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அது ஒரு சிறிய தியாகம் என்ற திரு இங், வாக்காளர்கள் நடுநிலையான தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியைப் புறந்தள்ளியது ஆச்சரியமளிப்பதாகக் கூறினார்.

