கடந்த 2023 ஆகஸ்டில் ஆர்ச்சர்ட் ரோடு கைகலப்பில் ஈடுபட்ட குற்றவாளியான முஹமட் ஷஹருல்னிஸாம் உஸ்மானை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி முஹமட் ஷஹருல்னிஸாம் உஸ்மானுக்கு, 31, இரண்டு ஆண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
தன்னுடைய நண்பர் முஹமட் இஸ்ரட் முஹமட் இஸ்மாயிலுக்கு, 29, உதவ அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவித்த இரண்டு குற்றச்சாட்டுகளை நவம்பரில் ஷஹருல்நிஸாம் ஒப்புக்கொண்டார்.
ஷருல்நிஸாம் தனது முந்தைய, இக்குற்றத்துடன் தொடர்பற்ற கலகக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர்.
தற்போதைய வழக்கில் ஆர்ச்சர்ட் ரோடு கைகலப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு இஸ்ரட்டுக்கு ஷாருல்நிஸாமிடம் கத்தியைக் கொடுத்திருந்தார்.
இந்த கொலைச் சம்பவத்தில் அஸ்வாய்ன் பச்சன் பிள்ளை சுகுமாறனுடன் 30, இஸ்ரட்டும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி விடியற்காலை 4.30 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்ரட் திடீரென போட்டிக் கும்பலை நோக்கி தகாத வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் கும்பல்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
ஷர்வின் ஜே நாயர், 25, விஷ்ணு சூரியமூர்த்தி, 28 ஆகியோர் இஸ்ரட்டைத் தாக்கினர். ஷஹருல்நிஸாம், கத்தியைக் கொண்டு ஷர்வினின் முழங்கை, விஷ்ணுவின் கழுத்து, முன்நெற்றி, மார்பில் வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரட்டும் ஷாருல்நிஸாமும் மீண்டும் கான்கார்ட் ஹோட்டலுக்குத் திரும்பினர்.
மின்படிக்கட்டியில் ஏறியபோது இஸ்ரட்டின் சிறிய கத்தி கீழே விழுந்தது. அஸ்வின் அந்த கத்தியை எடுத்து இஸ்ரட்டை பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.
கிளப் ரூமர்ஸ் மனமகிழ் மன்றத்தின் உரிமையாளர்கள் அவசர வாகனத்தை வரவழைத்தனர். ஆனால் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்ரட் அங்கு உயிரிழந்தார்.
ஷர்வினுக்கு ஜூனில் ஒராண்டு, எட்டு வாரச் சிறை, 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
விஷ்ணு, அப்துல் தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.