தஞ்சோங் பகாரில் ஆர்க்கிட் ஹோட்டல் $273 மில்லியனுக்கு விற்பனை

தஞ்சோங் பகாரில் ஆர்க்கிட் ஹோட்டல் $273 மில்லியனுக்கு விற்பனை

படம்: ஆர்க்கிட் ஹோட்டல் சிங்கப்பூர்

18 Jun 2026 - 5:47 pm

1 mins read

தஞ்சோங் பகாரில் 272 அறைகளைக் கொண்டுள்ள ஆர்க்கிட் ஹோட்டல் கிட்டத்தட்ட 273 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது.

1 டிராஸ் லிங்க்கில் உள்ள 20 மாடிக் கட்டடத்தின் மேலே உள்ள 18 தளங்களில் ஆர்க்கிட் ஹோட்டல் அமைந்துள்ளது. இது, தஞ்சோங் பகார் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறது.

விற்கப்பட்டுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 5,000 சதுர மீட்டர் பரப்பளவிலான ஸ்ட்ராட்டா அலுவலகப் பகுதியும் (strata office unit) அடங்கும். அப்பகுதி கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ளது.

ஏலக் குத்தகைக் காலவரம்பில் இன்னும் 80 ஆண்டுகள் எஞ்சியுள்ள இடத்தில் கட்டடம் அமைந்துள்ளது.

ஆர்க்கிட் ஹோட்டல், சம்பந்தப்பட்ட அலுவலகப் பகுதி இரண்டையும் ஆர்க்கிட் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விற்றுள்ளது. அந்நிறுவனம், மறைந்த சொத்து மேம்பாட்டாளர் சங் கிம் ஹுவாட்டின் குடும்பத்தாருக்குச் சொந்தமானது.

திரு சங், சிஜிஎச் குழுமத்தை நிறுவியவராவார்.

ஆர்க்கிட் ஹோட்டலை வாங்கியது ஒரு கூட்டு நிறுவனம் என்று நம்பப்படுகிறது. அதில் பெரும்பான்மை பங்குகளை வகிக்கும் தரப்பு, லியாவ் பான் லியோங்குடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

லியாவ் பான் லியோங், சிங்கப்பூரில் இயங்கும் மாஸ்டர் கான்ட்ரேக்ட் சர்விசஸ் கட்டுமான, சொத்துக் குழுமத்தின் இரு உரிமையாளர்களில் ஒருவராவார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விற்பனைதஞ்சோங் பகார்