உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் இருவருக்கு உத்தரவு

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் இருவருக்கு உத்தரவு

2 mins read
69e5e6a8-1247-41d3-87bf-b8eb196a4986
சைரஸ் ஸுல்கர்னாயின் அல் ‌‌‌ஷாரியர் என்ற 19 வயது மாணவர், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் மின் பதிப்பைக் கைப்பேசியில் காட்டும் படத்தை எடுத்துக்கொண்டார். - படம்: உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

சிங்கப்பூரில் உள்ள இருவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவருக்கு 19 வயது.

சைரஸ் ஸுல்கர்னாயின் அல் ‌‌‌ஷாரியர் என்ற 19 வயது மாணவர், காஸா போர் காரணமாகத் தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் எடுத்த ஒரு புகைப்படம் தீவிரவாதச் சித்தாந்தத்தை முன்னிறுத்தும் வகையில் இருந்தது.

படத்தின் பின்னணியில் மரினா பே சேண்ட்ஸ் கட்டடத்தையும் படத்தின் முன்புறத்தில் இஸ்லாமியத் தீவிரவாதச் சித்தாந்தங்களைக் காட்டும் கைப்பேசித் திரையையும் காண முடிகிறது.

தீவிரவாதம் தொடர்பான பல்வேறு யோசனைகளால் கவரப்பட்டதை அடுத்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உத்தரவு பெற்ற இரண்டாவது நபர் சைரஸ்.

யூதர்களுக்கு எதிராகவும் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு ஆதரவாகவும் இணையத்தில் அவர் பதிவேற்றிய பதிவுகளைக் கண்ட பொதுமக்களில் சிலர் அதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவரைத் தடுத்து வைக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹமாஸ் உத்தரவிட்டால் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருந்ததாக 30 வயது தர்மிஸி முகம்மது தாஹா ஒப்புக்கொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்குத் தமது தேசியச் சேவை திறன்களை அர்ப்பணிக்கவும் விரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

சைரசுக்கும் தர்மிஸிக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்றபோதும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில் தொடரும் பூசல் அந்த இருவருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

காஸா போரால் தூண்டப்பட்டு தீவிரவாதச் சித்தாந்தத்தின் பக்கம் சாய்ந்த சைரசும் தர்மிஸியும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திகீழ் உத்தரவு பெற்ற ஏழாம், எட்டாம் நபர்கள்.

இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ள இணையத்தளங்களில் செயல்படும் பல்வேறு சமயக் குழுக்களில் 2022ஆம் ஆண்டு இணைந்த சைரஸ், மேற்கத்திய நாடும் ஓரின சேர்க்கை ஆகியவற்றுக்கு எதிரான உள்ளடக்கங்களைக் கண்டார்.

அதையடுத்து, ஓரின சேர்க்கை சமூகத்துக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இணையத்தில் அவர் பதிவேற்றினார்.

2024ஆம் ஆண்டு ஹமாஸ் குழுவில் இணைய காஸாவுக்குச் சென்று இஸ்ரேலியர்களுக்கு எதிராகப் போராடுவது குறித்தும் சைரஸ் யோசித்ததாகத் தெரிகிறது. ஆனால், போதுமான வளங்கள் இல்லாததால் அந்த எண்ணத்தை அவர் கைவிட்டார்.

இதற்கிடையே, ஹமாஸ் கிளர்ச்சிக் குழு குறித்து கலந்துரையாடும் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் இணைந்த தர்மிஸி, பாலஸ்தீனர்களை ஒடுக்குவோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது சரி என்று நம்பினார்.

குறிப்புச் சொற்கள்
பாதுகாப்புபாதுகாப்புத் துறைசட்டம்சிங்கப்பூர்இளையர்