தலைசிறந்த சாரணர்கள், சாரணியர் ஆகியோருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருதுகளை வழங்கினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 2ஆம் தேதியன்று இஸ்தானாவில் நடைபெற்றது.
14 வென்சர் சாரணர்களுக்கும் ஆறு சாரணியருக்கும் 2024ஆம் ஆண்டு அதிபர் சாரணர், சாரணியர் விருதுகள் வழங்கப்பட்டன.
2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செயல்பாடு, சமூக சேவை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தலைசிறந்த சாரணர்கள், சாரணியருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறான, மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்திய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தேசிய, உலகளாவிய விவகாரங்கள் தொடர்பான திட்டங்களில் அவர்கள் பங்கெடுத்தனர்.