தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 9, 10ஆம் தேதிகளில் 30 பேருந்துப் பாதைகளில் மாற்றம்

2 mins read
6c8eb206-95f1-4bfd-bf66-beab80a1a64c
பல எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகள் கட்டங்கட்டமாக மாற்று வழிகளில் திருப்பி விடப்படும் என்று அந்நிறுவனம் ஆகஸ்ட் 6ஆம் தேதி கூறியது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்புக்காக ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று சில சாலைகள் மூடப்படுவதால் நகரத்தின் வழியாக செல்லும் 30க்கும் மேற்பட்ட பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும்.

பல எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகள் கட்டங்கட்டமாக மாற்று வழிகளில் திருப்பி விடப்படும் என்று அந்நிறுவனம் ஆகஸ்ட் 6ஆம் தேதி கூறியது.

பாதிக்கப்பட்ட சேவைகளாவன: 10, 14, 16, 32, 51, 56, 57, 63, 70M, 80, 100, 107M, 111, 124, 130, 131, 133, 145, 166, 174, 195, 196, 197, 400, 502, 851 and 851e.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 7 மணி வரை, நிக்கல் நெடுஞ்சாலை நெடுகிலும், மரினா பே, குடிமை வட்டாரத்தைச் சுற்றிலும் உள்ள 40க்கு மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காது.

பேஃபிரண்ட் எம்ஆர்டி நிலையம், ராஃபிள்ஸ் ஹோட்டல், எஸ்பிளனேட் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பேருந்து நிறுத்தங்களும் பாதிக்கப்படும்.

“பேருந்துகளைப் பயன்படுத்துவோர் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமாயின் எம்ஆர்டி ரயில்களில் பயணம் செய்யலாம்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆலோசனை கூறுகிறது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 11.59 மணி வரை, எஸ்எம்ஆர்டி 961, 960, 960e, 61 பேருந்து சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறைகளிலும் மட்டும் ஓடும் 961M சேவையும் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிற்காது.

இவை எஸ்பிளனேட் எம்ஆர்டி நிலையம் Exit F, ஷா டவர்ஸ், சிங்கப்பூர் ராட்டினத்துக்கு அப்பால், தி எஸ்பிளனேட், மரினா பே மிதக்கும் மேடை, புரோமினாட் எம்ஆர்டி நிலையம்/பான் பசிபிக் ஹோட்டல், உச்ச நீதிமன்றம், ராஃபிள்ஸ் ஹோட்டல், ராஃபிள்ஸ் ஹோட்டலுக்கு அப்பால் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்காது.

மாற்று பாதைகள், வெவ்வேறு பேருந்து சேவைகளுக்கு மாறுபடும் என்பதால், பயணிகள் பேருந்து நிறுவனங்களின் இணையப் பக்கங்களையும் சமூக ஊடகங்களையும் பார்த்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்