தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூனைக்கு உணவளிக்கும் சமூகத்திற்கு உதவ 36,000 வெள்ளி நிதிதிரட்டு

2 mins read
a369bb16-0abb-429d-a6ca-4c6304f0807c
பூன் லே வட்டாரத்தில் 18 பேர் பூனைகளுக்கு உணவு கொடுத்து உதவினர். அவர்களைப் பார்த்து இந்த நிதி திரட்டு யோசனை தோன்றியது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பூனைக்கு உணவளிக்கும் சமூகத்திற்கு உதவும் நோக்கில் 36,000க்கும் அதிகமான வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு மாதம் நடந்த நிதி திரட்டு நடவடிக்கையில் அந்தத் தொகை கிடைத்தது.

பொதுவாகப் பூனைகளுக்கு உதவும் அமைப்புகளும் தனிமனிதர்களும் அவர்களது சொந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் சுமையைக் குறைக்க இந்த நிதி திரட்டு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

‘கிவ்.ஏஷியா’ (Give.Asia) இணையத்தளம் மூலம் நிதி திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட நிதி பூன் லே, செங்காங், சர்க்கிட் ரோடு மற்றும் சிங்கப்பூரின் தெற்குப் பகுதிகளில் உள்ள பூனைகளுக்கு உதவும் சமூகத்திற்கு வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் சிங்கப்பூர் முழுவதும் இருக்கும் பூனைகளுக்கு உதவும் சமூகத்திற்கு நிதி உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பூன் லே வட்டாரத்தில் 18 பேர் பூனைகளுக்கு உணவு கொடுத்து உதவினர். அவர்களைப் பார்த்து இந்த நிதி திரட்டு யோசனை தோன்றியது.

அந்த 18 பேர் பூன் லே வட்டார சமூகத்தில் உலவும் கிட்டத்தட்ட 250 பூனைகளுக்கு உணவு வழங்கினர். அதில் சிலர் ஒரு நாளுக்கு இருமுறை 40 பூனைகளுக்கு உணவு கொடுத்து வந்தனர். அதிகாலையும் இரவும் என நேரம் பார்க்காமல் பூனைகளுக்கு அவர்கள் உணவு கொடுத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் பூன் லேவில் உலவும் பூனைகளுக்காக நிதி திரட்டும் பணி தொடங்கியது. அதில் கிட்டத்தட்ட 19,800 வெள்ளி கிடைத்தது.

சராசரியாக ஒரு பூனைக்கு மாதம் 60 வெள்ளிக்கு உணவு வாங்கப்படுகிறது என்று தொண்டூழியர் ஒருவர் தெரிவித்தார்.

பூன் லேவில் உலவும் பூனைகளுக்கு உணவு வழங்க விரும்புபவர்கள் https://give.asia/campaign/empowering-the-cats-heroes-west#/story என்ற இணைய முகவரி வழியாக நன்கொடை வழங்கலாம்.

குறிப்புச் சொற்கள்