தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓவியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை: பொற்காசுகள், ரொக்கம் மாயம்

1 mins read
b1e2de32-e206-465a-9dc4-2a2200a4c9be
பாலி தீவுக்கு விடுமுறைக்காக சென்று டெப்போ சாலையில் உள்ள தனது கொண்டோமினிய இல்லத்துக்கு திரும்பிய ஓவியர் கோ சியா யோங், தமது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து திருடியுள்ளதாகத் தெரிவித்தார். - படம்:ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

புகழ்பெற்ற ஓவியர் கோ சியா யோங் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பாலி தீவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது இல்லத்தில் கொள்ளையர்கள் புகுந்து பொற்காசுகள், ரொக்கம் என $50,000க்கும் மேலான விலைமதிக்க முடியாத பொருள்களை திருடியுள்ளனர்.

எண்பத்து ஏழு வயது நிரம்பிய திரு கோ டெப்போ சாலையில் உள்ள தனது ஈரறை கொண்டோமினிய வீட்டில் வசித்து வருகிறார். மார்ச் 15ஆம் தேதி அவர் நாடு திரும்பியபோது அவரது இல்லத்தில் கொள்ளையர்கள் புகுந்து பொருள்களைத் திருடியுள்ளதைக் கண்டார்.

“பூட்டியிருந்த எனது பெரிய படுக்கை அறைக் கதவு திறந்த நிலையில் காணப்பட்டது.

“எனது அறை சூறையாடப்பட்டிருந்தது, பொருள்கள் வைத்திருக்கும் பெட்டகங்கள் திறந்து காணப்பட்டன, துணிமணிகள் சிதறிக் கிடந்தன,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமையல் அறை சன்னலைத் திறந்து கொள்ளையர்கள் புகுந்ததாக அறியப்படுகிறது.

திரு கோவின் மகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் காவல்துறை தடயவியல் குழு பலமணி நேரம் விசாரணை மேற்கொண்டு கைரேகைகளை சேகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்