தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிப்பது கடமை எனக் கருதும் வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்கள்

2 mins read
9854a596-76a4-4c8a-bb83-efc744a423fc
வெளிநாட்டு வாக்காளர்களுக்கான வாக்களிப்பு முறையில் கூடுதல் படிநிலைகள் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கடமையைத் தாம் உயர்வாகக் கருதுவதாகக் கூறுகிறார் அறிவியல் ஆய்வாளர் டாக்டர் பர்வின் குமார், 38.  - படம்: டாக்டர் பர்வின் குமார்

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் அல்லது வேலை செய்யும் சிங்கப்பூர்க் குடிமக்கள் பலர், தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ள நிலையில் பொதுத்தேர்தல் முடிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கடந்த 2011 முதல் சுவீடனில் ஸ்டாக்ஹோலம் நகரில் வசித்துவரும் அறிவியல் ஆய்வாளர் டாக்டர் பர்வின் குமார், 38, கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு முன்னதாகத் தமது வாக்கை அனுப்பியிருக்கிறார்.

“வாக்கை முடிவு செய்வதற்கு முன்னதாக நான் இணையத்தின்வழி தேர்தல் பிரசாரத்தைப் பின்தொடர்ந்து எனது முடிவை எடுத்துதேன்,” என்றார் டாக்டர் பர்வின்.

வெளிநாட்டு வாக்காளர்களுக்கான வாக்களிப்பு முறையில் கூடுதல் படிநிலைகள் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கடமையைத் தாம் உயர்வாகக் கருதுவதாகக் கூறுகிறார். 

“நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையாது ஜனநாயக வளர்ச்சி. மக்களாகிய நாம் வாக்களித்தால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரே வாக்கு என்றாலும் சிறு துளி பெருவெள்ளம்,” என்றார் டாக்டர் பர்வின்.

பிரிட்டனில் ஒரு பள்ளித்தவணை பயிலும் ஆ. விஷ்ணுவர்தினி, லண்டனிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தில் மே 2 ஆம் தேதி வாக்களித்ததாக கூறுகிறார்.

“தற்போது சிங்கப்பூரில் நான் இல்லாதபோதும் நம் நாட்டுச் செய்தித் தளங்களைப் படித்து அண்மை நிலவரத்தை அறிந்துகொள்வேன். குறிப்பாக, தமிழ் முரசு வலையொளியின்மூலம் இளையர்களது பார்வைகளையும் கவனிப்பாளர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்வதில் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. இங்குள்ள சிங்கப்பூரர்கள் சிலருடன் நான் தேர்தல் முடிவுகளை அணுக்கமாக, உடனுக்குடன் பின்தொடர்வேன்,” என்று அவர் கூறினார்.

ஹாங்காங்கில் மனைவி மகளுடன் வசிக்கும் சிங்கப்பூரரான நிதி நிர்வாகி குமரேசன் சுப்பிரமணியன், வேட்பு மனுத்தாக்கல் வெளி வந்து இரண்டு நாள்களுக்குள் வெளிநாட்டு வாக்காளராகப் பதிவு செய்யத் தவறியதால் தம்மால் வாக்களிக்க முடியவில்லை. “வாக்களிப்பதை நானும் கடமையாகக் கருதுவதால் அடுத்த முறை கவனமாக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்