பார்ட்லி சாலையில் கவிழ்ந்த வேன்; விசாரணையில் உதவும் ஓட்டுநர்

பார்ட்லி சாலையில் கவிழ்ந்த வேன்; விசாரணையில் உதவும் ஓட்டுநர்

படம்: ஃபேபியன்லீஸ்போர்/ டிக்டாக்

13 Oct 2026 - 10:11 am

1 mins read

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்த காவல்துறையின் விசாரணையில் ஆடவர் ஒருவர் உதவிவருகிறார்.

அக்டோபர் 12ஆம் தேதி, ஆடவர் ஓட்டிய வேன் சாலைக்கு நடுவில் உள்ள தடுப்பில் மோதி மறுபக்கம் கவிழ்ந்தது.

பிரேடல் சாலையை நோக்கிச் செல்லும் பார்ட்லி சாலையில் ஏற்பட்ட அந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13), காலை 5.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சாலையில் சென்ற வாகனம் சறுக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதை ஓட்டிய 50 வயது ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டிக்டாக்கில் பரவிவரும் காணொளியில், பார்ட்லி சாலைக்கு நடுவில் உள்ள தடுப்பு கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் காண முடிகிறது.

வாகனத்தின் பின்புறமும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது. சம்பவ இடத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளையும் காணொளியில் காண முடிந்தது. அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சாலைவிபத்துவாகனம்ஓட்டுநர்விசாரணை