தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு விரைவுச்சாலையில் ஏழு வாகன விபத்து; மருத்துவமனையில் இருவர்

1 mins read
8fc83f83-6747-45dc-9d52-a3a1323b91e9
நான்கு கார்கள், ஒரு டாக்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இந்த விபத்தில் சிக்கியதாகக் காவல்துறையினர் கூறினர். -  படம்: ‘எஸ்ஜிஆர்வி’ ஃபேஸ்புக் 

தீவு விரைவுச்சாலையில் சனிக்கிழமையன்று (மே 17) நடந்த ஏழு வாகனத் தொடர் விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் காயமடைந்தனர்.

அப்பர் புக்கிட் தீமா ரோட்டின் வெளிவாயிலுக்கு அடுத்து சாங்கியை நோக்கிச் செல்லும் விரைவுச் சாலைப் பகுதியில் நேர்ந்த இந்த விபத்து பற்றிய தகவல் தங்களிடம் காலை கிட்டத்தட்ட 9.50 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

நான்கு கார்கள், ஒரு டாக்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இந்த விபத்தில் சிக்கியதாகக் காவல்துறையினர் கூறினர். விசாரணை தொடர்கிறது.

விரைவுச்சாலையின் ஆக வலப்பக்கத் தடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார், பிரேக் ஒளியை மின்னியவாறு தன் வேகத்தைக் குறைத்துகொண்டிருந்ததை ‘எஸ்ஜிஆர்வி’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டுகிறது.

சம்பவத்தின்போது மழை பெய்து கொண்டிருந்ததும் காணொளியில் தெரிகிறது.

இதனை அடுத்து, அந்த காருக்குப் பின்னால் இருந்த மற்றொரு கார் திடீரென நிற்க, மற்றொரு வாகனம் அதன் மீது மோதியது.

சிவப்பு நிற கார் ஒன்று விபத்தைத் தவிர்க்க எண்ணி விரைவுச்சாலையின் தடுப்பு ஒன்றில் மோதி நின்றதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

மோட்டார் சைக்கிள் ஒன்று சறுக்கி விரைவுச்சாலையின் நடுப்பகுதியில் விழுந்ததும் காணொளியில் தெரிந்தது.

குறிப்புச் சொற்கள்